எப்பிஐ பதவி விலக முடிவு செய்தவருக்கு ட்ரம்ப் கூறிய பதில்
எப்பிஐ (FBI) துணை இயக்குநர் பொறுப்பில் இருந்து அடுத்த மாதம் விலகப்போவதாக டான் போங்கினோ அறிவித்துள்ளார். அவரது இந்த முடிவு சிறப்பானது என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.
முன்பு சட்ட அமலாக்கப் பிரிவில் பணியாற்றி வந்த போங்கினோ, நியூயார்க் போலீசாகவும், ரகசிய உளவாளியாகவும் வேலை செய்து வந்தார்.

கடந்த மார்ச் மாதம் எப்பிஐயின் துணை இயக்குநராக பொறுப்பேற்ற நிலையில், இந்தப் பதவியை 10 மாதங்களே வகித்துள்ளது. இந்த நிலையில், எப்பிஐ துணை இயக்குநர் பொறுப்பில் இருந்து அடுத்த மாதம் விலகப்போவதாக டான் போங்கினோ அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'நான் ஜனவரியில் எப்பிஐ பதவியை விட்டு விலகுகிறேன். எனக்கு இந்தப் பொறுப்பை வழங்கிய அதிபர் டிரம்ப், அட்டர்னி ஜெனரல் போண்டி மற்றும் இயக்குநர் படேல் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
குறிப்பாக, உங்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை அளித்த எனது அமெரிக்க சகோதரர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அமெரிக்காவும், அதை பாதுகாக்கும் அனைவரையும் கடவுள் ஆசிர்வதிக்கப்பட்டும்,' எனக் கூறினார்.
ஆனால், தன்னுடைய பதவி விலகும் முடிவிற்கான காரணத்தை அவர் குறிப்பிடவில்லை. இத குறித்து கருத்து தெரிவித்த அதிபர் டிரம்ப், 'டான் சிறப்பான காரியத்தை செய்துள்ளார். அவர் மீண்டும் தனது பழைய வேலைக்கே திரும்புவார் என்று நினைக்கிறேன்,' என்றார்.