மிரட்டல் விடுக்கும் ட்ரம்பின் செயற்பாடு ; வெளியான செயற்கைக்கோள் படங்கள்
வெனிசுலா கடற்கரையிலிருந்து 200 கி.மீ. தொலைவில் இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளும் அமெரிக்க இராணுவக் கப்பலின் செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன.
இந்த சூழ்நிலையில் அங்கு சர்வாதிகார ஆட்சியை நடத்தி வரும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவிற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ட்ரம்பின் செயற்பாடு அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.

இராணுவ இருப்பு
கரீபியன் கடல் மற்றும் கிழக்கு பசுபிக் பகுதியில் அமெரிக்கா தனது இராணுவ இருப்பை அதிகரித்து, போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான துருப்புக்களை நிலைநிறுத்தி வருகின்றது.
ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவிற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ட்ரம்பின் செயற்பாடு அமைந்திருப்பதாகவும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை குறிவைப்பதாக ட்ரம்ப் தெரிவித்து வருகிறார்.
ஆனால் காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல் வெனிசுலாவின் முக்கியமான இராணுவ இலக்குகளைத் தாக்க அமெரிக்கா தயாராகி வரக்கூடும் என்ற ஊகத்தை அரசியல் அவதானிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.
செயற்கைக்கோள் படங்கள் இந்த ஊகத்தை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.