கனடாவிற்கு அமெரிக்கா ஜனாதிபதி வித்துள்ள அச்சுறுத்தல்
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா இணைந்து அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு சேதம் விளைவிக்க முயன்றால், மிகப்பெரிய அளவில் வரிகள் விதிக்கப்படும்" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
"அமெரிக்காவை பாதிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் கனடாவுடன் சேர்ந்து செயல்பட்டால், தற்போது திட்டமிடப்பட்டதை விட மிகப்பெரிய வரிகள் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐரோப்பா மற்றும் கனடாவிற்கு எப்போதும் நெருங்கிய நண்பனாக அமெரிக்கா இருந்துள்ளது என அவர் தனது Truth Social பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 25% வரி, விதிக்கப்பட்டுள்ளது. இது, அமெரிக்காவின் நேச நாடுகளின் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.
"இது தொழில் முனைவோருக்கு மோசமானது, நுகர்வோருக்கு இன்னும் மோசமானது" என ஐரோப்பியக் ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் விமர்சித்துள்ளார்.
"இந்த வரிகள் கனடிய தொழிலாளர்களுக்கான நேரடி தாக்குதலாகும்" என்று கூறியதோடு, பழிவாங்கும் நடவடிக்கைகள் பரிசீலனை செய்யப்படுகின்றன என கனடாவின் பிரதமர் மார்க் கார்னி, தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வரிகள் ஏப்ரல் 3ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.