கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்க கடற்படையினர் ; பெருமிதத்தில் ட்ரம்ப்
ஈரான் துறைமுகங்களை அமெரிக்க கடற்படையினர் முற்றுகையிட்டுள்ளனர். இதில், ஈரானின் கப்பல் ஒன்றை அவர்கள் கைப்பற்றியதைப் பற்றிக் குறிப்பிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ”கடற்படையினர் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்டனர்” எனக் கூறினார்.
புளோரிடாவில் நேற்று (மே 1)நடைபெற்ற பேரணியின் போது பேசிய ட்ரம்ப், “நமது கடற்படையினர் அந்தக் கப்பலின் மேலே இறங்கினர். பின்னர் அதனை முழுவதுமாகக் கைப்பற்றினர்.

ஹோர்முஸ் நீரிணை
நாம் அந்த சரக்குக் கப்பல் மற்றும் அதனுள் இருந்த எண்ணெய் ஆகியவற்றை கைப்பற்றினோம். இது மிகவும் இலாபகரமான தொழில். நமது படையினர் ஒருவகையில் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்டனர். அவர்கள் விளையாட்டாக அதில் ஈடுபடவில்லை” என்று தெரிவித்தார்.
ஹோர்முஸ் நீரிணையை மூடிய ஈரான் அதன்வழியே செல்லும் கப்பல்களிடம் வரி வசூலிக்கத் திட்டமிட்டருந்தது. இதுபற்றி அரசியல் வல்லுநர்கள் எச்சரித்திருந்த நிலையில் அமெரிக்கப் படையினரை கடற்கொள்ளையர்கள் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
”இந்த முற்றுகை தேவைப்படும் வரை நீடிக்கும். ஈரான் துறைமுகத்திற்குச் செல்லும் அனைத்து கப்பல்களும், அது எந்த நாட்டின் கப்பலாக இருந்தாலும் அவை முற்றுகையிடப்படும்” என்று அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.
அமெரிக்கா இந்த முற்றுகையைத் தொடரும் வரை ஹோர்முஸ் நீரிணை வழியே கப்பல்கள் செல்வது தடுக்கப்படும் என்று ஈரான் குறிப்பிட்டுள்ளது.