ஈரானுக்கு எதிரான போர் வெற்றிகரமாக நடைபெறுகிறது – டிரம்ப்
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிராக மேற்கொண்டு வரும் போர் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.
எல்லாம் நன்றாகவே நடைபெற்று வருகிறது. தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். இறுதியில் ஏதோ ஒரு முடிவு ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், எங்கள் படைகள் ஈரானை கடுமையாக தாக்கி வருகின்றன. அவர்களை முற்றிலும் தளர்ச்சியடையச் செய்து வருகிறோம்.
நாங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறோம். இறுதியில் அவர்கள் பின்வாங்குவதைத் தவிர வேறு வழியிருக்காது என டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், டிரம்பின் இந்த கருத்து மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.