இந்தியாவிற்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ; இறக்குமதி பொருட்களுக்கு 25% வரி
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இரண்டு நாட்களில் அமெரிக்காவின் பரஸ்பர வரி காலக்கெடு முடிவடையும் நிலையில், டிரம்பின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சில மாதங்களுக்கு முன்பு பல நாடுகள் மீது வரிகளை அறிவித்திருந்தார். ஆனால் பேச்சுவார்த்தைக்கு அனுமதிக்க அதை நிறுத்தி வைத்தார்.
இந்தநிலையில் ட்ரூத் சோஷியலில் அவர் வெளியிட்ட பதிவில், ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீத வரியை விதிக்கும் என்று கூறியுள்ளார்.
''இந்தியா நமது நண்பனாக இருந்தாலும், அவர்களின் வரிகள் மிக அதிகமாக உள்ளதால், பல ஆண்டுகளாக நாம் அவர்களுடன் ஒப்பீட்டளவில் குறைவாகவே வர்த்தகம் செய்து வருகிறோம்.'' என அவர் தெரிவித்துள்ளார்.