கனடாவில் படகு விபத்தில் 75 முதியவர் பலி
கனடாவின் கவார்த்தா ஏரிகளில் உள்ள பால்சம் ஏரியில் செவ்வாய்க்கிழமை மாலை படகு கவிழ்ந்ததில் 75 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.
பால்சம் ஏரிப் பகுதியிலிருந்து அவசர அழைப்பு வந்ததாக ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் தெரிவித்தனர்.
படகில் சென்ற ஒருவர் நீரில் தவறி விழுந்து மீண்டும் மேலே வரவில்லை என்று அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அந்த முதியவரைத் தேடும் பணி நடைபெற்றது, ஆனால் இரவு நேரம் வரை அவர் கண்டுபிடிக்கப்படவில்லை.
காவல்துறையினர், நீருக்கடியில் தேடுதல் மற்றும் மீட்பு பிரிவு புதன்கிழமை பிற்பகல் 1:30 மணியளவில் அவரது உடலை கண்டுபிடித்ததாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.