துப்பாக்கிச்சூடு தொடர்பில் மனம் திறந்து பேசிய டிரம்ப்!
கடந்த சில தினங்களுக்கு முன் பென்சில்வேனியாவில் தேர்தல் பிரச்சாரத்தில் போது நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் டொனால்ட் டிரம்ப் நேற்று முன்தினம் நடந்த குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் கட்சியினரிடையே மனம் திறந்துள்ளார்.
குடியரசுக் கட்சியின் அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டபின் மாநாட்டில் பேசிய அவர்,
இன்றுதொட்டு நான்கு மாதத்தில் [அதிபர் தேர்தலில்] நம் மிகப்பெரிய வெற்றியை பெற உள்ளோம். நான் முழு அமெரிக்காவுக்கும் அதிபர், பாதி அமெரிக்காவுக்கு மட்டுமல்ல என்று தெரிவித்தார்.
மேலும் துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து விவரித்த அவர்,
'எல்லா இடங்களிலும் ரத்தம் சிந்திக்கொண்டிருந்தது, இருந்தபோதிலும் நான் மிகவும் பாதுகாப்பாகவே உணர்ந்தேன். கடவுள் என் பக்கம் இருக்கிறார்.
கடைசி நொடியில் நான் எனது தலையை அசைக்காமல் இருந்திருந்தால் தோட்டா குறிவைக்கப்பட்ட எனது நெற்றியில் பாய்ந்திருக்கும். இன்று உங்கள் முன்னாள் நான் இருந்திருக்க மாட்டேன்.
நான் இங்கு இருந்திக்க வேண்டியவனே இல்லை. ஆனால் கடவுளின் கருணையால் இங்கு உங்கள் முன் நிற்கிறேன்' என்று தெரிவித்தார்.
மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்த பாதிகாப்பு வீரருக்கு டிரம்ப் அஞ்சலி செலுத்தினார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற குடியரசுக் காட்சியைச் சேர்ந்தவர்கள்
தங்களது காதில் டிரம்பைப் போல் கட்டு போட்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.