30 நாடுகளில் உள்ள தூதரகங்களை மூடும் டிரம்ப்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 30 நாடுகளில் உள்ள தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களை மூடுவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
அமெரிக்க அரசாங்கத்தின் தேவையற்ற செலவுகளை குறைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மூடப்படவுள்ள தூதரகங்களில் 10 தூதரகங்களும், 17 துணைத் தூதரகங்களும் அடங்குகின்றன.
ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா தூதரகங்கள்
அதன்படி ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா உள்ளிட்ட மண்டலங்களில் உள்ள சில தூதரகங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சோமாலியா, ஈராக், மால்டா (Malta), லக்சம்பர்க் (Luxembourg), கொங்கோ மற்றும் தெற்கு சூடான் போன்ற நாடுகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அதேவேளை பிரான்சில் அமெரிக்காவிற்கு ஐந்து தூதரகங்கள் செயல்பட்டு வருவதால், அவற்றையும் மூட முடிவு செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, ஜெர்மனி மற்றும் போஸ்னியாவில் உள்ள இரண்டு தூதரகங்கள் மற்றும் பிரித்தானியாவிலுள்ள ஒரு தூதரகத்தை மூடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறு மூடப்படவுள்ள தூதரகங்களின் பணிகள், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மூலம் தொடரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.