ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 50% வரிவிதிப்பு ; மீண்டும் ஆரம்பிக்கும் ட்ரம்ப்
அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்துடன் வரி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் நேரடியாக 50 சதவீதம் வரி விதிக்க விரும்புகிறேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் வர்த்தக போர் வெடிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
வரி அச்சுறுத்தல்
ஜூன் 1 முதல் ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகள் மீது 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்தார்.
அமெரிக்காவிற்கான ஏற்றுமதியை அதிகரிக்கும் ஒரே குறிக்கோளுடன் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகள் எந்தப் பலனையும் அளிக்கவில்லை என்றும் டிரம்ப் சுட்டிக்காட்டினார்.
டிரம்பின் 50 சதவீத வரி அச்சுறுத்தலுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பதிலளிக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிற்கு 500 பில்லியன் யூரோ மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்கிறது.
ஜெர்மனி, அயர்லாந்து மற்றும் இத்தாலி ஆகியவை முக்கிய ஏற்றுமதி நாடுகள் ஆகும்.