டிரம்ப் டீ - சர்ட் ஆல் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட இளைஞர்!
அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்திய டிரம்ப் டீ - சர்ட் ஆல் இளஞர் ஒருவர் விமாத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இணையத்தில் பரவிய வைரல் வீடியோ ஒன்றில் பெண் ஒருவரிடம் பாலியல் உறவு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலே ஹா தூ [Hawk .
இதுதொடர்பான மீம்கள் இணையத்தில் உலா வரும் நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பையும் Hawk Tuah வார்த்தையையும் இணைத்து டீ - சர்ட் அணிந்த நபர் விமானத்தில் இருந்து இறங்கிவிடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவில் டெல்டா ஏர்லைன்ஸில் ஏறிய இளைஞர் ஒருவர் தான் செக்யூரிட்டியைத் தாண்டி வரும்வரை உள்புறம் வெளியிலும் வெளிப்புறம் உள்ளே இருக்குமாறு தான் அணிதிருத்த டி சர்ட்டை கழற்றி டிரம்ப் மற்றும் Hawk Tuah மீமியை இணைத்து மோசமான வகையில் சித்தரிக்கும் படம் கொண்ட டீ சர்டின் பகுதி வெளியே தெரியுமாறு அணிந்துள்ளார்.
இதை அவதானித்த விமான ஊழியர்கள் அந்த இளைஞரை விமானத்திலிருந்து வெளியேற்றியுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் , ஆபாச நடிகை வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.