அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கை தொடர்பில் ட்ரம்ப் பகீர் எச்சரிக்கை
அமெரிக்க கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையைக் குறைப்பது உயர்கல்வி முறைக்கு நிதி ரீதியாக அழிவை ஏற்படுத்தும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு நிதி உதவி செய்வதில் வெளிநாட்டு மாணவர்களின் பங்கு முக்கியமானது.
சர்வதேச மாணவர் சேர்க்கையைக் குறைப்பது பரவலான கல்லூரி மூடல்களுக்கும், பொருளாதார இழப்புக்கும் வழிவகுக்கும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், வெளிநாட்டு மாணவர்களை அமெரிக்காவில் படிப்பதற்கு அனுமதிப்பது, நாட்டின் உயர்கல்வி முறையை நிதி ரீதியாக வலுவாக வைத்திருக்கும் வணிக நடைமுறைக்கு நல்லது எனவும், பல அமெரிக்க பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து செயல்பட வெளிநாட்டு மாணவர்களை நம்பியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன், "வெளிநாட்டு மாணவர்கள் இருப்பது நல்லது என்று நான் உண்மையில் நினைக்கிறேன். நான் உலகத்துடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன்.
சீனா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாகக் குறைவது அமெரிக்காவில் உள்ள பாதி கல்லூரிகளை வணிகத்திலிருந்து வெளியேற்றக்கூடும்.
வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்க பொருளாதாரத்திற்கு டிரில்லியன் கணக்கான டொலர்களை பங்களிக்கின்றனர். உள்நாட்டு மாணவர்கள் செலுத்துவதை விட, வெளிநாட்டு மாணவர்கள் இரண்டு மடங்கு அதிகமாகச் செலுத்துகின்றனர்.
நான் அவர்களை விரும்புகிறேன் என்பதல்ல, ஆனால் நான் அதை ஒரு வணிகமாகவே பார்க்கிறேன்" என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.