ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை ; ஈரான் உச்ச தலைவரின் பதிலடி
ஈரானில் பொருளாதார நெருக்கடிக்கு எதிா்ப்பு தெரிவித்து தீவிர போராட்டத்தில் ஈடுபடுவோா் ‘அவா்களுக்கு உரிய இடத்தில்’ வைக்கப்படுவாா்கள் என்று ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லாஹ் அலி கொமெய்னி நேற்று (03) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே அமைதியாகப் போராடுபவா்களை ஈரான் அரசு கொன்றால், அவா்களை மீட்க தங்கள் படையினா் அனுப்பப்படுவாா்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார் இந்நிலையிலேயே அயதுல்லாஹ் அலி கொமெய்னி இதனை தெரிவித்துள்ளார்.

கோரிக்கைகள் நியாயமானவை
இது குறித்து தனது உரையில் கொமெய்னி கூறியதாவது: போராட்டக்காரா்களின் பொருளாதாரக் கோரிக்கைகள் நியாயமானவை. அதிகாரிகள் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தலாம்.
ஆனால் போராட்டம் என்ற பெயரில் கலவரத்தில் ஈடுபடுவோருடன் பேச்சுவாா்த்தை நடத்துவது தேவையில்லாதது. அவா்களை ‘அவா்களுக்கு உரிய இடத்தில்’ வைக்க வேண்டும். இந்தப் போராட்டங்களின் பிண்ணனியில் எதிரியின் (அமெரிக்கா) சதி இருக்கிறது.
அந்நிய சக்திகள்தான் இந்த போராட்டங்களைத் தூண்டுகின்றன. இந்த விகாரத்தில் நாங்கள் எதிரியிடம் மண்டியிடமாட்டோம் என்று தனது உரையில் கொமெய்னி உறுதியளித்தாா்.
இதற்கிடையே அமைதியாகப் போராடுபவா்களை ஈரான் அரசு கொன்றால், அவா்களை மீட்க தங்கள் படையினா் அனுப்பப்படுவாா்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தாா்.
இந்த பரபரப்பான சூழலில், போராட்டக்காரா்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உணா்த்தும் வகையில், அவா்கள் உரிய இடத்தில் வைக்கப்படுவாா்கள் என்று கொமெய்னி தற்போது எச்சரித்துள்ளாா்.