எலன் மஸ்க் இதை மட்டும் செய்தால் பின்விளைவுகள் மோசமாகும் ; எச்சரிக்கும் ட்ரம்ப்
தொழிலதிபர் எலான் மஸ்க் உடனான நட்புறவு முற்று பெற்று விட்டது, இந்நிலையில் வெளிப்படையாக ஜனநாயக கட்சியினருக்கு உதவினால் பின்விளைவுகளை எதிர்கொள்வார் என அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இதனால் ட்ரம்ப்பின் முன்னாள் நண்பரான மஸ்க், இப்போது அவரது பிரதான எதிரியாக மாறியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் தொலைபேசி வழியாக அமெரிக்க ஊடக நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், “மஸ்க் உடனான நட்புறவு முற்று பெற்று விட்டதாக நினைக்கிறேன். நான் மற்ற பணிகளை செய்வதில் மிகவும் தீவிரமாக உள்ளேன். ஜனாதிபதி தேர்தலில் நான் மிகப்பெரிய வெற்றியை பெற்றேன்.
பின்விளைவுகளை எதிர்கொள்வார்
ஆனால், அதற்கு முன்பாகவே அவருக்கு நிறைய சலுகைகள் அளித்தேன். நான் முதல் முறை ஜனாதிபதியாக ஆட்சி பொறுப்பில் இருந்த போதும் இதை செய்தேன். அவரது உயிரை காத்தேன்.
அவருடன் பேசும் எண்ணம் எனக்கு இல்லை. 2026இல் நடைபெறும் இடைத்தேர்தலில் அவர், ஜனநாயக கட்சி உறுப்பினர்களுக்கு ஆதரவு அளித்தால் நிச்சயம் அதற்கான பின்விளைவுகளை எதிர்கொள்வார்” என ட்ரம்ப் கூறியுள்ளார்.
ட்ரம்ப் இப்போது மஸ்க்கை குறிவைத்துள்ளதாக அமெரிக்காவில் பார்க்கப்படுகிறது. அதை சுட்டும் வகையில் அவரது அண்மைய பேச்சும் இருந்துள்ளது.
அரசின் செலவினங்களை குறைக்க மஸ்க்கின் நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தை இரத்து செய்தால் போதும் என ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.