ஆப்பிள் ஐபோன்களுகு 25% வரி விதிப்பு; ட்ரம்ப் எச்சரிக்கை!
ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்காவில்லை என்றால், இறக்குமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு 25% வரி விதிக்கப்படும் ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்(Iphones) உற்பத்தியை இந்தியாவில் அதிகளவில் உற்பத்தி செய்து வருகின்ற நிலையில் இந்தியாவில் ஐபோன்கள் தயாரிக்கப்படுவதை டொனால்ட் ட்ரம்ப் விரும்பவில்லை.
இந்நிலையில் ஐபோன் தயாரிப்பு குறித்து பேசியிருக்கும் ட்ரம்ப், “அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்றும் தான் நீண்ட காலமாக ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக்கிடம் (TIM COOK ) தெரிவித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐபோன்கள் இந்தியாவிலோ அல்லது வேறு எங்குமோ தயாரிக்கப்படக் கூடாது எனவும் இது நடக்கவில்லை என்றால், குறைந்தபட்சம் 25% கட்டணத்தை ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவுக்கு செலுத்த வேண்டும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வரும் அனைத்து இறக்குமதிகளுக்கும் 50% வரி விதிக்கப்படும் என்றும் டொனால் ட்ரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.