பறக்கும் விமானத்தில் பெண்ணொருவரை சீண்டிய ட்ரம்ப்; 81 வயது மூதாட்டி புகார்!
விமான பயணத்தின் போது பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஒருவர் ட்ரம்ப் மீது புகாரளித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்டு ட்ரம்ப் மீது ஆபாச பட நடிகை ஸ்டாரமி டேனியல்ஸ், பத்திரிகையாளரும், புகழ்பெற்ற எழுத்தாளுருமான ழான் கரோல் என்ற பெண்மணி ஆகியோர் ட்ரம்ப் மீது பாலியல் புகார்களை முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை அமெரிக்க சிவில் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வயோதிப பெண் புதிய புகார் ஒன்றை அளித்துள்ளார்.
1978இல் விமானப் பயணம் மேற்கொண்ட போது அதில் ட்ரம்ப் சக பயணியாக வந்ததாகவும், அப்போது எதிர்பாராத விதமாக தனக்கு முத்தம் கொடுக்க முயற்சித்தும், மார்பகங்களை சீண்டியும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் ஜெசிக்கா லீட்ஸ்(81) என்ற பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தனது ஸ்கர்ட் உடையில் அத்துமீறி கை வைத்து தொல்லை கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.