கடும் சர்ச்சையில் முடிந்த ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆகியோர் போரை முடிவுக்கு கொண்டு வர நடத்திய பேச்சு பாரிய சர்ச்சையில் முடிவடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி இடையே வெள்ளையை மாளிகையில் நடந்த சந்திப்பு கடுமையான வார்த்தை மோதல்களில் முடிந்து உள்ளது.
வெள்ளை மாளிகை சந்திப்பு
வெள்ளை மாளிகை சந்திப்பின்போது அமெரிக்கஜனாதிபதி டிரம்பும் துணை ஜனாதிபதி ஜேடிவான்ஸ் ஜெலென்ஸ்கியை கடுமையாக விமர்சித்தார்கள் எனவும் உக்ரைன் ஜனாதிபதி பிரச்சார பயணங்களில் ஈடுபடுகின்றார் என குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் தற்போது நல்ல நிலையில் இல்லை எனவும், பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகும் உக்ரைனிற்கான ஆயுத உதவியை அமெரிக்கா நிறுத்தும் என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து உக்ரைன் ஜனாதிபதியை அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்ட வெள்ளை மாளிகை செய்தியாளர் மாநாட்டையும் இரத்து செய்தது.
அதனையடுத்து பொருளாதார ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலும் வெள்ளை மாளிகையில் நடந்த விருந்தில் பங்கேற்காமலும் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார் என தெரிவிக்கப்படுகின்றது.