அரபு பாரம்பரிய உடையில் ட்ரம்ப், இவான்கா ; வைரலாகும் AI புகைப்படம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வளைகுடா நாடுகளில் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதில் முதலாவதாக நேற்று சவுதி அரேபியாவுக்கு வருகை தந்தார்.
இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மகள் இவான்கா ஆகியோரின் முகங்களை வைத்து செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் மூலமாக அரபு பாரம்பரிய உடைகளுடன் உருவாக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை சவுதி அரேபியாவில் உருவாக்கி உள்ளதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அரபு மக்களின் உயர்ந்த விருந்தோம்பலின் அடையாளமாக இந்த புகைப்படம் உருவாக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரபு பாரம்பரிய உடையில் கழுத்தில் பட்டன்கள் கொண்ட வெள்ளை கந்தூர அணிந்துள்ளார்.
சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான துணியை தலையில் போர்த்தி, கருப்பு கயிற்றால் செய்யப்பட்ட அகல் தலையில் வைத்திருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அவரது மகள் இவான்கா கருப்பு நிறத்திலான அபாயா எனப்படும் அரபு பெண்கள் அணியக்கூடிய உடையை அணிந்து அரபு நாட்டின் காவா (காபி) பானம் குடிப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது.