"ட்ரூத் சோசியல்"....சொன்னதை செய்து காட்டிய டிரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் "ட்ரூத் சோசியல்" என்ற தனி சமூக வலைத்தளத்தை உருவாக்கியுள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கும் சமூக வலைத்தளமான பேஸ்புக்,ட்விட்டர் ஆகியவற்றிற்கும் பலமுறை மோதல் ஏற்பட்டுள்ளன. அவற்றில் டிரம்ப் அவர்களது கருத்துக்கள் அனைத்தும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் இதன் காரணமாக குறித்த சமூக வலைத்தளங்கள் அந்த பதிவினை நீக்கிவிடும். அதற்கும் மேலாக அவரது பக்கங்கள் கூட முடக்கப்பட்டது.
இதனால் அதிருப்தியடைந்த டிரம்ப் சமூக ஊடகத்திற்கு எதிராக தனி சமூக வலைத்தளம் தொடங்குவேன் என கூறியிருந்தார்.
அவர் சொன்னதை செய்வது போல தற்போது "ட்ரூத் சோசியல்". என்னும் தனி சமூக வலைத்தளத்தை உருவாக்கியுள்ளார்.