96 செக்கன்களுக்கு சேவையை இடைநிறுத்தும் ரீ.ரீ.சீ; ஏன் தெரியுமா?
மறைந்த பிரித்தானிய மகாராணிக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் கனடாவின் பொதுப் போக்குவரத்துச் சேவையான ரி.ரீ.சீ தனது சேவையை 96 செக்கன்களுக்கு இடைநிறுத்த உள்ளது.
மகாராணியின் இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ள எதிர்வரும் 19ம் திகதி திங்கட்கிழமை இவ்வாறு தனது சேவையை 96 நிமிடங்களுக்கு இடைநிறுத்த திட்டமிட்டுள்ளது.
திங்கட்கிழமை பிற்பகல் வேளையில் இவ்வாறு சேவையை இடைநிறுத்தப்பட உள்ளது. பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது 96ம் வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அஞ்சலி செலுத்தும் குறிப்பிட்ட நேரத்தில் ரயில் சேவை பற்றிய அறிவிப்புகள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகள் என்பனவும் இடைநிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அஞ்சலி செலுத்துகை தொடர்பில் றொரன்டோ போக்குவரத்து சேவை அல்லது ரீ.ரீ.சீ மக்களுக்கு அறிவிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, எதிர்வரும் 19ம் திகதி பிற்பகல் ஒரு மணிக்கு றொரன்டோ மக்கள் மகாராணிக்காக அஞ்சலி செலுத்துமாறு மாகாண முதல்வர் டக் போர்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.