உலகை உலுக்கிய துருக்கி பூகம்பம்; 11 நாள்களுக்குப் பின்னரும் மூவர் மீட்பு
துருக்கி நிலநடுக்கம் ஏற்பட்டு 11 நாள் ஆகியுள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில் அங்கு தொடர்ந்தும் மீட்பு பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் 11 நாள்களுக்குப் பிறகு, மிகவும் 3 போ் உயிருடன் மீட்கப்பட்ட அதிசய நிகழ்ந்துள்ளது.
துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட 260 மணி நேரத்துக்குப் பிறகு, உஸ்மான் என்ற 14 வயது சிறுவnஉம் 26 வயது, 33 வயது கொண்ட இரண்டு இளைஞா்களும் கட்டட இடிபாடுகளிலிருந்து அதிருஷ்டவசமாக மீட்கப்பட்டனா்.
கட்ட இடிபாடுகளுக்கு உள்ளிருந்து வந்த சப்தத்தைக் கேட்டு அந்த சிறுவனை குழுவினா் மீட்டனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
துருக்கியிலும், சிரியாவிலும் கடந்த 6-ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாகப் பதிவானது.
இரு நாடுகளிலும் இந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 43,850 போ் பலியாகியுள்ளமை உலக மக்களை கலங்கடித்துள்ளது.