யூடியூபில் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் டிவி பிரபலங்கள்: யார் அவர்கள் தெரியுமா?
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யூடியூப் தளத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த தளத்தில் நமக்கு தேவையான பல முக்கியத் தகவல்கள் கிடைக்கின்றன.
அதுமட்டுமின்றி தினசரி செய்திகள் மற்றும் முக்கியமான நிகழ்வுகள் என அனைத்தையும் இந்த தளத்தில் பார்க்க முடியும். அதேபோல் யூடியூப் தளத்தில் தனிநபர் கூட ஒரு சேனலை துவங்கி தகவல் நிறைந்த சிறப்பான காணொளிகளை வெளியிட்டால் வருமானம் கிடைக்கும்.
இதற்காகவே கண்டதையெல்லாம் கண்டதாக மாற்றி யூடியூபில் பதிவேற்றம் செய்பவர்தான் தமிழகத்தின் தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா.
இவரைப்போலவே மணிமேகலையும் தன்னுடைய கணவரை கூட்டிக்கொண்டு, வெவ்வேறு இடங்களை சுட்டிக் காட்டுவதும், அந்த இடத்தில் இருக்கும் விதவிதமான மனிதர்களை சந்திப்பது போன்ற காணொளியாக எடுத்து யூடியூபில் பதிவிடுவார்கள். இதிலிருந்து இவர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.
பிரியங்கா ஒருமுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அங்கிருந்து எடுக்கப்பட்ட காணொளியை வைத்து 7 லட்சம் சம்பாதித்துள்ளார்.
அதேபோல் மணிமேகலையும் ஒரு மாதத்தில் 6 லட்சம் வரை இதன் மூலம் சம்பாதிக்கிறாராம். இவர்கள் மட்டுமல்ல டிவி ஸ்டார் அனைவரும் தங்களுக்கென்று தனி யூடியூப் சேனலை உருவாக்கி அதில் எப்படி தலை சீவுவது, எப்படி சாப்பிடுவது, எப்படி தூங்குவது என்பது மட்டுமல்லாமல் கார் டூர், பிரிட்ஜ் டூர் என வீட்டில் இருக்கும் பொருள்களை எல்லாம் சுற்றி கண்பித்து காணொளிகளை உருவாக்குகின்றனர்.
தற்போது பிரியங்காவும் மணிமேகலையும் யூடியூபில் சம்பாரிக்கும் விவரத்தை அறிந்த ரசிகர்கள் வாயடைத்துப் போயுள்ளனர். அத்துடன் நம்மை யூடியூப் பார்த்தா அவங்களுக்கு காசு வருதா! என்ற இந்த விஷயம் தெரியாத சிலரும் உள்ளனர்.