ஒரே கருவில் பிறந்த இரு குழந்தைகள்; ஆனால் வெவ்வேறு வருடம்; உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்திய அதிசய இரட்டையர்கள்!
பொதுவாக இரட்டைக்குழந்தைகள் பிறக்கும்போது, அவர்கள் பிறந்த நேரம் சில நிமிடங்கள் மட்டும் மாறுபடும். இந்நிலையில் அதற்கு அமெரிக்காவில் ஒரு வருடமே மாறிப்போன அரிய நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில், பாத்திமா மாட்ரிகல் மற்றும் ராபர்ட் ட்ருஜிலோ தம்பதியருக்கு அண்மையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது. இது சாதாரண நிகழ்வு என்றாலும், குழந்தைகள் பிறந்த நேரம் வித்தியாசமாக அமைந்துள்ளது.
அதாவது முதல் குழந்தை டிச.31 2021 இரவு 11.45மணிக்கும், இரண்டாவது குழந்தை சரியாக நள்ளிரவு 12 மணிக்கும் பிறந்துள்ளது. இதனால், 15 நிமிட இடைவெளியில் பிறந்த குழந்தைகளின் ஒவ்வொருவரும் பிறந்த வருடமே மாறிப்போய் உள்ளது.
இந்த அரிதினும் அரிதான நிகழ்வு என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பாத்திமாவுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் கூறுகையில்,
'இது எனது பணி காலத்தில் நான் என்றென்றும் மறக்க முடியாத ஒரு பிரசவம்' என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குழந்தைகளை பெற்றெடுத்த பாத்திமா கூறிகையில், தனது இரட்டைக்குழந்தைகள் வெவ்வேறு வருடத்தில் பிறந்திருப்பது எனக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியை தருவதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் ஆண் குழந்தைக்கு ஆல்பிரெடோ ஆண்டோனியோ என்றும், பெண் குழந்தைக்கு அய்லின் யோலாண்டா என்றும் பெயர் சூட்டியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


