ரிஷி சுனக்கை கிரிக்கெட் வீரருடன் ஒப்பிட்டு கலாய்த்த ட்விட்டர்வாசிகள்!
இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக்கை(Rishi Sunakai), முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆஷிஷ் நெஹ்ராவுடன்(Ashish Nehra) ஒப்பிட்டு மீம்ஸில் ட்விட்டர்வாசிகள் கலாய்த்து தள்ளியுள்ளனர்.
இங்கிலாந்து நாட்டின் அடுத்த பிரதமராக ரிஷி சுனக் (வயது 42) தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் முதன்முறையாக இந்த பதவியை அலங்கரிக்கிறார்.
ரிஷி சுனக்கிற்கு(Rishi Sunakai) பிரதமர் மோடி, முன்னாள் இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ்(Liz dress) உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
சுனக்கிற்கு ட்விட்டர் வழியே வாழ்த்து கூறிய சிலர், அவருக்கு பதிலாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆஷிஷ் நெஹ்ராவின் (Ashish Nehra) புகைப்படங்களை பகிர்ந்து உள்ளனர்.
#RishiSunak with #ViratKohli ❣️ pic.twitter.com/6IICYVwuxK
— Professor ngl राजा बाबू ?? (@GaurangBhardwa1) October 24, 2022
நெஹ்ரா, ஏறக்குறைய தோற்றத்தில் ரிஷி சுனக்கை(Rishi Sunakai) ஒத்திருக்கும் சூழலில், வாழ்த்து செய்தியில் தவறுதலாக நெஹ்ராவின் புகைப்படங்களையும் பதிவிடுகின்றனர். அதற்கு வலு சேர்க்கும் வகையில், ட்விட்டரில் மீம்ஸ்களும் உலா வருகின்றன.