கனடாவின் மார்க்கமில் கோர விபத்து
கனடாவின் மார்க்கம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் இரவு இந்த வாகன விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மார்க்கம் வீதி இடைப்பகுதி மற்றும் எல்சோன் வீதி என்பனவற்றுக்கு அருகாமையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ட்ரக் வண்டியொன்றும் மற்றுமொரு வாகனமும் மோதிக் கொண்டதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களின் பால்நிலை, வயது போன்ற எந்தவொரு தகவல்களையும் பொலிஸார் வெளியிடவில்லை.
இந்த விபத்தில் மற்றுமொரு நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக யோர்க் பிராந்திய மருத்துவ உதவியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
விபத்து குறித்த விசாரணைகளை நடாத்தும் நோக்கில் குறித்த பகுதி வீதி மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.