கனடாவில் யார் இந்த அதிர்ஷ்டசாலிகள்?
கனடாவில் லோத்தர் சீட்டிலுப்பில் பெருந்தொகை பரிசுத்தொகைகள் இதுவரையில் பெற்றுக் கொள்ள படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சீட்டிலுப்பில் பரிசு வென்ற இரண்டு வெற்றியாளர்கள் தங்களது பரிசு தொகையை பெற்றுக் கொள்ளவில்லை என லொத்தர் சீட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பரிசு வென்ற இந்த இரண்டு லொத்தர் சீட்டுக்களும் காலாவதியாகும் நிலையை அண்மித்துள்ளன.
எதிர்வரும் இரண்டு வார கால பகுதிக்குள் இந்த லொத்தர் சீட்டு வெற்றியை உரிமை கோர தவறினால் அந்தப் பணத்தை பெற்றுக்கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்டனில் கொள்வனவு செய்யப்பட்ட லோட்டாரியோ லொத்தர் சீட்டு ஒன்றுக்கு பத்தாயிரம் டாலர்கள் பரிசு கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த லொத்தர் சீட்டு எதிர்வரும் ஒன்பதாம் திகதி காலாவதியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மிஸ்ஸிசாகுவாவில் கொள்வனவு செய்யப்பட்ட லொத்தர் சீட்டு ஒன்றுக்கு ஒரு மில்லியன் டாலர்கள் பரிசுத்தொகை கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த லொத்தர் சீட்டு எதிர்வரும் 16ஆம் திகதி காலாவதியாவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒவ்வொரு லெட்டர் சீட்டு நிறுவனமும் வெற்றி பெற்ற நபர்கள் பரிசுத்தொகை பெற்றுக் கொள்வதற்கு கால வரையறைகளை அறிவித்துள்ளன.
அந்த வகையில் இந்த இரண்டு லொத்தர் சீட்டுக்களுக்கான பரிசு தொகையை குறித்த காலத்திற்குள் பெற்றுக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
1-800-387-0098 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக விவரங்களை பரிசு வென்றவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.