பாரியளவில் போதைப் பொருள் கடத்திய 2 கனடியர்கள் கைது
சுமார் 25 கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருளை வாங்கூவார் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக கடத்த முயற்சித்த 2 கனடியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகளினால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
25 கிலோ கிராம் எடையினுடைய மெத்தப்பட்டமைன் என்ற போதை பொருளை இந்த கனடியர்கள் கடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட இந்த போதைப் பொருளின் சந்தை பெறுமதி 1.25 மில்லியன் டாலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இரு வேறு சந்தர்ப்பங்களில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 27 ஆம் திகதி 10 கிலோ கிராம் எடையுடைய மெத்தபட்டமைன் போதைப் பொருளுடன் ஒரு கனடியப் பிரஜையை, அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.
பயண பொதியில் மறைத்து வைக்கப்பட்டு இந்த போதைப்பொருள் நாட்டுக்குள் கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த ஜூலை மாதம் 29 ஆம் திகதி சுமார் 15 கிலோ கிராம் எடையுடைய மெத்தப்பட்ட மைன் போதைப் பொருளுடன் மற்றும் ஒரு கனடியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரும் பயண பொதிக்குள் மறைத்து வைத்து போதை பொருளை கடத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.