ஹமில்டன் விபத்தில் இரண்டு சிறுவர்கள் பரிதாப மரணம்;பொலிஸார் இரங்கல்
ஹமில்டனில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்றில் இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஹமில்டனின் பின்ப்ரூக் பகுதியில் விமான நிலைய மற்றும் மைல்ஸ் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயம் அடைந்திருந்த சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் மற்றும் ஒரு நபர் காய்மடைந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான தகவல்களை தற்போதைக்கு வெளியிட முடியாது என ஹமில்டன் தீயணைப்பு படை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
போலீஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதனால் இது குறித்த தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிட முடியாது என தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான விபத்து இடம் பெற்றது என்பது பற்றியோ விபத்துடன் தொடர்புடையவர்கள் பற்றியோ விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களுக்கு பொலிஸார் டுவிட்டர் பதிவு மூலம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.