கிரேக்கத்தில் இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து!
கிரேக்கத்தின் தலைநகர் ஏதென்ஸுக்கு மேற்கே உள்ள 'சாத்தா' பகுதியில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்திகா பிராந்தியத்திற்குட்பட்ட சாத்தா பகுதியில் காட்டுத் தீ விஸ்வரூபமெடுத்து பரவி வந்த நிலையில், அதைத் கட்டுப்படுத்தும் பணியில் பல தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
தீயணைப்பு நடவடிக்கைகளின் போது, எதிர்பாராதவிதமாக இரண்டு ஹெலிகாப்டர்கள் வானில் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த கொடூர விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்பதை கிரேக்க பிரதமர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
விபத்து குறித்துத் தகவலறிந்ததும் தீயணைப்புப் படையினரும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்தும், பலியானவர்களின் விவரங்கள் குறித்தும் முதற்கட்ட விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விவரங்களை அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.