யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு!
சாம்பியாவிலுள்ள ‘South Luangwa‘ தேசிய பூங்காவில், நேற்றைய தினம் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இரு வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த 68 வயதான Easton Janet Taylor என்பவரும், நியூசிலாந்தை சேர்ந்த 67 வயதான Alison Jean Taylor என்பவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் இருவரும், குட்டியுடன் இருந்த ஒரு பெண் யானை தாக்கியதால் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தின் போது சபாரி வழிகாட்டிகள் யானையை தடுக்க துப்பாக்கிச் சுட்டு நடத்தியதாகவும் இதனால் யானை காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறு இருப்பினும் யானையின் தாக்குதலில் இருந்து குறித்த பெண் சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாக்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பெண் யானைகள் தங்கள் குட்டிகளைக் பாதுகாக்க மிகவும் தீவிரமான பாங்கில் நடந்து கொள்வது வழக்கமானது.
திடீர் அச்சுறுத்தலாக எண்ணினால், மிக மோசமான தாக்குதலை மேற்கொள்ளக்கூடியவை என்பதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.