இனி செய்ய மாட்டோம்... அமெரிக்காவில் பொலிஸாரிடம் கதறிய இந்திய மாணவிகள்!
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உயர் கல்வி படித்து வரும் இந்திய மாணவிகள் 2 பேர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 20 வயது மாணவியும், குண்டூரைச் சேர்ந்த 22 வயது மாணவியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
இரு மாணவிகளும் ஹோபோக்கன் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் பொருட்களை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பல்பொருள் அங்காடி ஊழியர்கள் ஹோபோக்கன் நகர பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரு மாணவிகளையும் கைது செய்து விசாரித்தனர்.
அதில் ஒரு மாணவி காசு கொடுக்காத பொருளுக்கு இரு மடங்கு பணத்தை தந்துவிடுவதாகவும், மற்றொரு மாணவி இது போன்று இனி செய்ய மாட்டேன் என்று கதறி உள்ளார்.
இருப்பினும் தவறு செய்திருப்பது நிரூபணம் ஆகி உள்ளதால் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.