வெளிநாடொன்றில் இடிந்து விழுந்த சுரங்கம்: 15 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
வடக்கு மியான்மரின் உள்ள ஜேட் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்து சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (13-08-2023) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மியான்மரில் ஜேட் என்ற கனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கச்சின் மாகாணத்தில் உள்ள ஒரு சுரங்கத்தில் பல தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது யாரும் எதிர்பாராத விதமான அந்தச் சுரங்கம் இடிந்து விழுந்தது. இதில் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 15 தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் மாயமானதாக கூறப்படுகிறது. இவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.