மாண்ட்ரியலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி
கனடாவின் மாண்ட்ரியால் நகரில் உள்ள பிளாட்டோ பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த ஒரு மதுபானசாலை வளாகத்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் இரு ஆண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள மொன்ட்–ரொயல் அவென்யூ மற்றும் லவல் அவென்யூ சந்திப்பில் உள்ள எம்.ஆர். 250 பார் லொங் பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
போலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தபோது இரண்டு ஆண்கள் துப்பாக்கிச்சூட்டில் பலியான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர் என தெரிவித்துள்ளனர்.
இது ஒரு கொலைக்குப் பிறகு நடந்த தற்கொலை சம்பவம் என விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது,” என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர் 40 வயதுடையவர் எனவும் தற்கொலை செய்து கொண்டவர் 30 வயதுடையவர் என கூறப்பட்டுள்ளது.
இந்த துயரமான சம்பவத்தின் பின்னணிக் காரணம் இதுவரை வெளிவரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.