இலங்கை அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கிய இருவர் அதிரடியாக கைது!
இலங்கை அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கியதாக இரண்டு அவுஸ்ரேலியர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பல மில்லியன் டொலர் பெறுமதியான உட்கட்டமைப்பு ஒப்பந்தங்களை பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறு இலஞ்சம் வழங்கியதாக கூறப்படுகின்றது.
கடந்த 2009 முதல் 2016 வரை செய்யப்பட்ட ஒப்பந்தங்களுக்காக இவ்வாறு இலஞ்சம் வழங்கப்பட்டதாக இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கைதான சந்தேகநபர்கள் இருவரும் 67 மற்றும் 71 வயதுடைய அவுஸ்ரேலிய பிரஜைகள் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தெற்காசியாவில் தவறான நடவடிக்கை
தெற்காசியாவில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் நிறுவனத்தை சேர்ந்த இருவரையே அவுஸ்திரேலிய காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
14 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் பெறுமதியான உட்கட்டமைப்பு திட்டமொன்றை இலங்கையில் பெறுவதற்கான முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பலர் கைதுசெய்யப்படலாம்
இந்நிலையில் இந்த மோசடி சம்பவம் தொடர்பில் மேலும் பலர் கைதுசெய்யப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவை சேர்ந்த என்ற பொறியல் நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்தே அவுஸ்திரேலிய காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
2017 இல் குறிப்பிட்ட நிறுவனமும் அதன் துணை நிறுவனங்களும் இலங்கை பங்களாதேஸ் இந்தியாவில் உட்கட்டமைப்பு திட்டங்களை பெற்றுக்கொள்வதற்கு உலக வங்கி தடை விதித்தது.
அதேவேளை இந்த நிறுவனம் சட்டவிரோத கொடுப்பனவில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் உள்ளதாக உலக வங்கி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.