கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் 2 பேர் பரிதாப மரணம்

Kamal
Report this article
கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்தின் 103ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற பயங்கர வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
ஷெல்பெர்ன் அருகே வொல்க்ஸ்வாகன் ஜெட்டா மற்றும் ஃபோர்ட் F-150 பிக்கப் வாகனம் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
மோதலையடுத்து ஃபோர்ட் வாகனம் முழுமையாக தீப்பற்றியது. வொல்க்ஸ்வாகன் வாகனமும் தீவிர சேதமடைந்த நிலையில் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்தை அடைந்தனர்.
இந்த சம்பவத்தில் 42 வயதான பெண்ணும் 32 வயதான ஆணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்திற்கான காரணங்களை ஆராய நோவா ஸ்கோஷியா பொது பணித்துறை மற்றும் தொழிலாளர் துறை அதிகாரிகள், பொலிஸாருடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழில்துறையில் பயன்படுத்தப்பட்ட வாகனம் இதில் தொடர்புடையதால், தொழிலாளர் துறையும் இணைந்து விசாரிக்கின்றது.
சம்பவத்தையடுத்து அதிவேக நெடுஞ்சாலை பல மணி நேரமாக மூடப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துடன் தொடர்புடைய தகவல் அல்லது டாஷ்கேம் வீடியோ இருந்தால், ஷெல்பெர்ன் பொலிஸார் அலுவலகத்தை 902-875-2490 என்ற எண்ணிலும் அல்லது நோவா ஸ்கோஷியா குற்ற தகவல் மையத்தை 1-800-222-TIPS (8477) என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.