ஸ்கார்பரோவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் இருவர் காயம்
கனடாவின் ஸ்கார்பரோவிலுள்ள வீடொன்றை உடைத்து நுழைந்து தாக்கியதில் இரு ஆண்கள் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மெகோவான் சாலை மற்றும் ஃபிஞ்ச் அவென்யூக்கு அருகே உள்ள சாண்ட்ஹர்ஸ்ட் சர்கிளில், இன்று அதிகாலை 2:15 மணியளவில் ஏற்பட்ட இந்த சம்பவத்திற்கு அவசர சேவைப் படையினர் விரைந்து சென்றுள்ளனர்.
வீடு உடைந்து நுழைந்து, உள்ளே இருந்த இருவரை ஆயுதத்தின் மூலம் தாக்கியதுடன், வீட்டிலிருந்த நகைகளை கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலுக்குள்ளான இரு பெரியவர்கள் தீவிரமான ஆனால் உயிருக்கு ஆபத்தற்ற காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
“நேற்று இரவில் எதுவும் கேட்கவோ காணவோ இல்லை. இப்பகுதி மிகவும் அமைதியான இடம் என்று நாங்கள் நம்பினோம். இதுபோன்ற சம்பவம் அருகாமையில் நடக்கிறது என்றால், அது நிச்சயமாக அச்சமளிக்கும் வகையிலானது என சம்பவம் இடம்பெற்ற வீட்டின் அயல் வீட்டவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.