சுவிஸில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவருக்கு நேர்ந்த சோகம்!
சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் Aargau மாநில விபத்தில் கடந்தவாரம் ஏற்பட்ட ஒரு கோர விபத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சுழிபுரம் கிழக்கை பூர்வீகமாக கொண்டவர்கள் 69 வயதான தனபாலசிங்கம் கண்ணன் மற்றும் 34 வயதான கண்ணன் சுரேஷ் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், கண்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் இந்த விபத்தில் அவர்கள் சென்ற கார் பலத்த சேதமடைந்திருந்தது. விபத்து தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகனை முன்னெடுத்துள்ளனர்.