இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!
தென் கொரியாவில் இரண்டு பயிற்சி விமானங்கள் இன்று நடுவானில் மோதி கொண்டது. அங்கு இம்மாதிரியான விபத்து நடைபெறுவது அரிதிலும் அரிதான ஒன்று.
இந்த விபத்தில் மூன்று விமான உயிரிழந்ததாகவும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
தென்கிழக்கு நகரமான சச்சியோனில் உள்ள விமான தளம் அருகே அந்நாட்டு நேரப்படி மதியம் 1:35 மணி அளவில் விபத்து நடைபெற்றதாக விமானப் படை தெரிவித்துள்ளது.
எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பது குறித்து ஆராய்ந்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மூன்று விமானிகள் உயிரிழந்ததாகவும் ஒருவர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் சர்வதேச செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
விபத்துக்குள்ளான பகுதியில் 30 தீயணைப்பு வீரர்கள் ஆய்வு மேற்கொண்டுவருவதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

