கனடாவில் இரண்டு மணித்தியால இடைவெளியில் வாகனத்தில் மோதி தப்பிச்சென்ற 2 சம்பவங்கள்
கனடாவின் மிஸ்ஸிசாகுவாவில் இரண்டு மணித்தியால இடைவெளியில் வாகனத்தில் மோதி தப்பிச் சென்ற இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
நேற்றைய தினம் இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளன.
மிஸ்ஸிசாகுவாவின் அர்ஜன்டியா மற்றும் வின்ஸ்டன் சேர்ச்சில் வீதியில் வாகனமொன்றில் நபர் ஒருவர் மோதுண்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பீல் பிராந்திய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வாகனத் தரிப்பிடமொன்றில் நபர் ஒருவரை மோதிய வாகன சாரதி அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதேவேளை, டெரி மற்றும் டிக்ஸி ஆகிய வீதிகளுக்கு அருகாமையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த இரண்டு விபத்துச் சம்பவங்களிலும் காமயடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கியவர்கள் மற்றும் சந்தேக நபர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.