ருமேனியாவில் வாகன விபத்தில் இரு இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி
ருமேனியாவில் நான்கு சக்கர வாகனத்தை சாலை ஓரம் நடைபாதையில் நடந்து சென்ற இரு இலங்கையர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் இருவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து ருமேனியாவின் துல்சியா கவுண்டியில் உள்ள ஹொரியா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
சாலையில் வேகமாக பயணித்த நான்கு சக்கர வாகனத்தில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் நடந்து கொண்டிருந்த இரு இலங்கையர்கள் மீது மோதியே விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குறித்த விபத்தினால் இரு இலங்கையர்களும் உயிரிழந்துள்ளதுடன், விபத்தினை ஏற்படுத்திய காரும் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளது.
இதன்படி உயிரிழந்த இலங்கையர்கள் இருவரும் அராட் கவுண்டியில் உள்ள நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்தவர்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.