கனடாவில் வாகனங்கள் மீது கற்களை வீசிய இளைஞர்கள் கைது
கனடாவில் ஓடும் வாகனங்கள் மீது கற்களை வீசிய இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
18 மற்றும் 17 வயதான இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பயணம் செய்த வாகனங்கள் மீது இவ்வாறு கற்கள் வீசி எறியப்பட்டுள்ளன.
குறிப்பாக மார்க்கம் மற்றும் வித்சர்ச் பகுதிகளில் இந்த கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சந்தேக நபர்கள் இருவருக்கு எதிராகவும் சுமார் 31 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்தேக நபர்கள் இடமிருந்து ஆயுதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒன்றாரியோ மாகாண பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.