உலகின் மிக உயரமான கட்டிடத்தில் ஒளியால் ஜொலித்த இந்திய தேசியக் கொடி !
துபாய் நாட்டில் உலகின் மிக உயரமான புர்ஜ் கலிபா கட்டிடத்தில் இந்திய தேசியக் கொடி லேசர் ஒளியால் ஒளிபரப்பப்பட்டது.
புர்ஜ் கலிபா மற்றும் துபாயில் உள்ள பல்வேறு பொழுதுப்போக்கு அம்சங்களுக்காக உலக நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாவாசிகள் ஆண்டுதோறும் இங்கு வருகின்றனர்.
#WATCH | United Arab Emirates: Burj Khalifa illuminated in colours of the Tricolour on #IndependenceDay. pic.twitter.com/WKVWzRrapq
— ANI (@ANI) August 15, 2023
இதற்கிடையே, இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்றைய தினம் கோலகாலமாக கொண்டாடப்பட்டது.
நாடு முழுக்க பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு புர்ஜ் கலிபா கட்டிடத்தில் லேசர் ஒளியால் இந்தியாவின் மூவர்ண கொடி, மகாத்மா காந்தியின் உருவம் உள்ளிட்டவை லேசர் ஒளியில் ஒளிபரப்பானது.