தென் சூடானில் தரையிறங்கிய உகாண்டா இராணுவம்
கிழக்காபிரிக்க நாடான தென் சூடானில் உகாண்டா நாட்டுப் படைகள் தரையிறக்கப்பட்டுள்ளதாக உகாண்டாவின் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
தென் சூடானில் அந்நாட்டு ஜனாதிபதி சால்வா கீர் மற்றும் துணை ஜனாதிபதி ரெயிக் மச்சார் ஆகியோருக்கிடையிலான உறவில் விரிசல் உண்டானதால், அங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தம் முறிந்து மீண்டும் மோதல் வெடிக்கும் அபாயம் நிலவி வருகின்றது.
இந்நிலையில், அயல் நாடான உகாண்டாவின் இராணுவம் தென் சூடான் தலைநகர் ஜீபாவில் ஜனாதிபதி சால்வாவிற்கு உதவுவதற்காக தரையிறக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இதற்கான காரணம் குறித்து உகாண்டா இராணுவத் தளபதி கூறுகையில், ஜனாதிபதி சால்வாவிற்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும் உகாண்டா மீதான போராகக் கருதப்படும் எனத் தெரிவித்துள்ளார்.