ஈரானில் பிரிட்டிஷ் தம்பதியருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை ; குடும்பத்தினர் கோரிக்கை
ஈரானில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் பிரிட்டிஷ் தம்பதியினரான லிண்ட்சே (Lindsay) மற்றும் கிரெய்க் ஃபோர்மேன் (Craig Foreman) ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரிட்டிஷ் தம்பதி கடந்த 2025 ஜனவரி 3 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் பயணத்தில் இருந்தபோது கைது செய்யப்பட்னர், அதைத் தொடர்ந்து அவர்கள் மீது உளவு பார்த்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை
எனினும், பிரிட்டிஷ் தம்பதி இந்தக் குற்றச்சாட்டினை அவர்கள் மறுத்துள்ளனர்.
முன்னதாக கடந்த ஒக்டோபர் மாதத்தில் தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய புரட்சிகர நீதிமன்றத்தில் மூன்று மணி நேரம் நீடித்த விசாரணையில் பிரிட்டிஷ் தம்பதி முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
எனினும், இதன்போது அவர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் தம்பதியரின் குடும்பத்தார் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த தண்டனை “ஈரானில் இங்கிலாந்து குடிமக்கள் மீதான மிகக் கடுமையான அரசியல் நோக்கம் கொண்ட தடுப்புக் காவல் நடவடிக்கை என்றும், அவர்களை விடுதலை செய்வதற்கு இங்கிலாந்து அரசாங்கம் விரைவாகச் செயல்பட வேண்டும் என்றும் குடும்பத்தார் வலியுறுத்தினார்.
அதேவேளை பிரிட்டிஷ் தம்பதி மீது , ஈரானிய அதிகாரிகளால் உளவு பார்த்ததற்கான எந்த ஆதாரமும் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை அவர்கள் கூறுகின்றனர்.