பிரித்தானியாவில் புகழ்பெற்ற நடிகர் மீது குவியும் புகார்கள்!
பிரித்தானியாவில் பிரபல ஹாலிவுட் நடிகர் மீது பாலியல் வன்புணர்வு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் கெவின் ஸ்பேஸி (Kevin Spacey) மீது பிரித்தானியாவில் பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
தி யுசுவல் சஸ்ஃபெக்ஸ் மற்றும் அமெரிக்கன் பியூட்டி ஆகிய திரைப்படங்களுக்காக இரண்டு முறை ஆஸ்கர் விருது பெற்ற கெவின் கடந்த 2004 முதல் 2012 ஆம் ஆண்டு வரை ஓல்ஃபெக் தியேட்டரில் கலை இயக்குநராக பணியாற்றினார்.
நீ-2 இயக்கம் ஆரம்பித்த சமயத்தில் இருந்தே கெவின் ஸ்பேஸி மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதுவரை தன் பாலின ஈர்ப்பாளரான கெவின் ஸ்பேஸி மீது மூன்று ஆண்கள் பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.