போதைப்பொருள் கொடுத்து மனைவியை பலருக்கு விருந்தாக்கிய அரசியல்வாதி; 13 ஆண்டு கொடுமை!

Sexual harassment Crime England Women
By Sulokshi Dec 24, 2025 01:26 PM GMT
Sulokshi

Sulokshi

Report

 இங்கிலாந்தின் ஸ்விண்டன் (Swindon) பகுதியில், மனிதநேயமற்ற முறையில் தனது மனைவியையே 13 ஆண்டுகாலமாகப் போதைப்பொருள் கொடுத்துப் பலருக்கு விருந்தாக்கிய முன்னாள் அரசியல்வாதியின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்து அதிரவைத்துள்ளது.

49 வயதான பிலிப் யங் (Philip Young) என்ற அந்த நபர், தனது மனைவி ஜோன் யங் (Joanne Young) என்பவருக்குத் தெரியாமலேயே அவருக்குப் போதைப்பொருள் கொடுத்து மயக்கமடையச் செய்து நண்பர்களுடன் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் கொடுத்து மனைவியை பலருக்கு விருந்தாக்கிய அரசியல்வாதி; 13 ஆண்டு கொடுமை! | Uk Husband 5 Others Accused Of Sex Offenses Wife

கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவு

கடந்த 2010 முதல் 2023 வரை சுமார் 13 ஆண்டுகள் இந்த கொடுமையை அரங்கேற்றியுள்ளார். இந்நிலையில் கணவனே தனது மனைவியின் வாழ்வைச் சிதைக்கத் தனது நண்பர்களையும் கூட்டாளிகளையும் பயன்படுத்தியமை அதிர வைத்துள்ளது.

இந்தக் கொடூரச் செயலில் பிலிப் யங் மட்டுமின்றி, மேலும் 5 ஆண்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஜோன் யங் உணர்வற்ற நிலையில் இருந்தபோது அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் காவல் துறை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கொடுத்து மனைவியை பலருக்கு விருந்தாக்கிய அரசியல்வாதி; 13 ஆண்டு கொடுமை! | Uk Husband 5 Others Accused Of Sex Offenses Wife

நார்மன் மேக்சோனி, டீன் ஹாமில்டன், கானர் சாண்டர்சன் டாய்ல், ரிச்சர்ட் வில்கின்ஸ் மற்றும் முகமது ஹசன் ஆகிய அந்த ஐந்து நபர்களும் தற்போது கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இங்கிலாந்தின் முன்னாள் கன்சர்வேடிவ் கட்சி கவுன்சிலராக இருந்த ஒருவரே இத்தகைய செயலில் ஈடுபட்டது பிரித்தானிய அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் ஜோன் யங், தனது அடையாளத்தை மறைக்க விரும்பாமல், உலகிற்குத் தனது துயரத்தை வெளிப்படுத்தத் துணிச்சலாக முன்வந்துள்ளார்.

அதேவேளை பிரான்சில் இதேபோன்ற முறையில் பாதிக்கப்பட்ட ஜிசெல் பெலிகாட் (Gisèle Pelicot) என்பவரைப் போலவே, இவரும் தனது பெயரை ஊடகங்களில் வெளியிட அனுமதி அளித்துள்ளார்.

பெண்ணிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்

பிலிப் யங் மீது மட்டும் சுமார் 56 பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதில் கற்பழிப்பு, போதைப்பொருள் கொடுத்து மயக்கமுறச் செய்தல் மற்றும் பிறரின் அந்தரங்கத்தைப் படம் பிடித்தல் (Voyeurism) உள்ளிட்ட தீவிரமான பிரிவுகள் அடங்கும். தற்போது இந்த ஆறு நபர்களும் ஸ்விண்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் (Swindon Magistrates’ Court) ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

நீண்ட காலமாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தச் சதியை வெளிக்கொண்டு வரப் போலீசார் பல மாதங்களாகத் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

“இது மிகவும் சிக்கலான மற்றும் விரிவான விசாரணை” எனத் தெரிவித்துள்ள வில்ட்ஷயர் காவல் துறையினர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தேவையான அனைத்து ஆதரவுகளையும் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் கணவனால் 13 ஆண்டுகால நரகத்தை அனுபவித்த அந்தப் பெண்ணிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என உலகெங்கிலும் உள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
மரண அறிவித்தல்

சுன்னாகம், மலேசியா, Malaysia, கொழும்பு, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Kuching, Malaysia, கொழும்பு, சுழிபுரம், London, United Kingdom, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Toronto, Canada

20 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, பிரான்ஸ், France, கனடா, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

தொல்புரம், கொழும்பு, Schwyz, Switzerland, Markham, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

ஜெயந்திநகர், பாரதிபுரம், பூநகரி, Wembley, United Kingdom

22 Dec, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Scarborough, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Zürich, Switzerland

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, சிட்னி, Australia

21 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர், கைதடி

25 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Markham, Canada

24 Dec, 2021
33ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 3ம் வட்டாரம்

25 Dec, 1992
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Markham, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

சுன்னாகம், கிளிநொச்சி

22 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, ஏழாலை தெற்கு

24 Dec, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Maur-des-Fossés, France

18 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

22 Dec, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு 5

23 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Scarborough, Canada

24 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டி, தெல்லிப்பளை, Toronto, Canada

21 Dec, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், Anaipanthy

22 Dec, 2015
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US