ஊக்கத்தொகை தாறோம் சென்றுவிடுங்கள்; சட்டவிரோதமாக நுழைந்த இந்தியர்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் குடியேறிகள் தாமாக முன்வந்து வெளியேறினால், அவர்களுக்கு கிறிஸ்துமஸ் ஊக்கத்தொகையாக இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2.70 லட்சம் வழங்கப்படும் என டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
நாடு கடத்தும் நடவடிக்கைகளை வேகப்படுத்தவும், அதற்கான நிர்வாக செலவுகளை குறைக்கவும் இந்த சலுகை வழங்கப்படுகிறது.

மூன்று மடங்காக உயர்த்தப்பட்டுள்ள ஊக்கத்தொகை
இதன்படி, 'CBP Home' என்ற செயலி மூலம் பதிவு செய்து, இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியேற சம்மதிப்பவர்களுக்கு இலவச விமான பயணச் சீட்டுடன் இந்த தொகையும் வழங்கப்படும்.
மேலும், சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக விதிக்கப்படும் அபராதங்களும் ரத்து செய்யப்படும்.
முன்னதாக மே மாதம் அறிவிக்கப்பட்ட ரூ.1,000 ஊக்கத்தொகை தற்போது மூன்று மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை, "இந்த சிறப்பு வாய்ப்பை பயன்படுத்தாதவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள்; அவர்கள் மீண்டும் ஒருபோதும் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது" என தெரிவித்துள்ளது.
அதேவேளை ஜனவரி 2025 முதல் இதுவரை சுமார் 19 லட்சம் பேர் அமெரிக்காவை விட்டு தாமாக வெளியேறியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.