இந்தியாவிற்கான விசா விதிகளை தளர்த்தும் எண்ணம் இல்லை ; பிரித்தானிய பிரதமர்
இந்தியாவுக்கான விசா விதிகளை இங்கிலாந்து தளர்த்தாது என்று பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார்.
நூற்றுக்கும் மேற்பட்ட குழுவினருடன் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்டாமரிடம், அமெரிக்கா H-1B விசா கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இதனை பிரித்தானியா சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்தியர்களுக்கான விசா விதி
இதற்கு பதிலளித்த அவர், இங்கிலாந்து பொருளாதாரத்தை வளர்க்க உதவும் வகையில் உலகம் முழுவதிலுமிருந்து “சிறந்த திறமையாளர்களை” ஈர்க்க இங்கிலாந்து விரும்புவதாக கூறியுள்ளார்.
இந்தியர்களுக்கான விசா விதிகளை தளர்த்தும் எண்ணம் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், மாறாக வணிகத்தில் அதிக முதலீடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்தியாவுடன் வர்த்தகம் மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்த பெரிய வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதன்பொருள் இந்தியாவில் இருந்து கார்கள் மற்றும், விஸ்கி முதலியவற்றை ஏற்றுமதி செய்வது, அதேபோல் ஜவுளி மற்றும் நகைகளை ஏற்றுமதி செய்வது உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைகளை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரதமர் கெய்ர் ஸ்டாமர் தலைமையிலான தொழிற்கட்சி அரசாங்கம் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கட்டுப்படுத்துவதில் பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. இதற்காக விசா விதிகளை கடுமையாக்கியுள்ளது.
புதிய நிபந்தனைகள் பிரித்தானியாவில் நிரந்தரமாக தங்குபவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
மக்கள் மத்தியில் தொழிற்கட்சி அரசாங்கம் செல்வாக்கை இழந்துள்ள சூழ்நிலையில், அத்துடன் இங்கிலாந்தில் முதலீட்டை அதிகரிக்கவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் கெய்ர் ஸ்டாமர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.