கனடாவில் பொலிஸ் உத்தியோகத்தரின் வாகனத்தில் மோதி வயோதிப பெண் பலி
ஒன்டாரியோ மாகாணம், செயின்ட் கேத்தரின்ஸ் நகரில் நடந்த விபத்தில் வாகனம் மோதிய 85 வயதான முதியவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என்று நயாகரா பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெல்லண்ட் அவென்யூ மற்றும் பன்டிங் ரோடு சந்திப்பில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் (plaza) வாகன நிறுத்துமிடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வாகனம் மோதிய முதியவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விபத்தை ஏற்படுத்தியவர் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த நயாகரா பிராந்திய பொலிஸ் அதிகாரி எனத் தெரியவந்துள்ளது.
அவர் விபத்து நடந்த இடத்திலேயே இருந்து விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை ஹாமில்டன் போலீஸ் மேற்கொண்டு வருகிறது.
விபத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது தகவல் தெரிந்தவர்கள் ஹாமில்டன் போலீஸை 905-546-4753 என்ற எண்ணிலோ அல்லது reconunit@hamiltonpolice.ca என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.