ஈரான் அரசின் நிலை குறித்து அமெரிக்க எச்சரிக்கை ; மார்கோ ரூபியோ
ஈரானிய அரசாங்கம் முன்னெப்போதையும் விட இப்போது பலவீனமாக உள்ளது என அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
ஈரானின் முக்கியப் பிரச்சினையான பொருளாதாரம் மேம்படுவதற்கான அறிகுறிகள் தென்படாததால், அங்கு மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும் என்று எதிர்பார்ப்பதாக மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டு உறவுகள் குழுவில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
"ஈரானிய அரசாங்கம் அதன் வரலாற்றிலேயே முன்னெப்போதையும் விட இப்போது அதிக பலவீனமாக உள்ளது.
கடந்த காலங்களில் சில விடயங்களுக்காக போராட்டங்கள் நடந்தன. ஆனால் தற்போது போராட்டக்காரர்கள் முன்வைக்கும் அடிப்படைப் முறைப்பாடுகளுக்கு தீர்வு காண அந்த அரசாங்கத்திடம் எந்த வழியும் இல்லை.
ஏனெனில் அவர்களது பொருளாதாரம் முற்றாகச் சீர்குலைந்துள்ளது." என ரூபியோ சுட்டிக்காட்டியுள்ளார்.